புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது மனைவியின் முதலாவது விவாகம் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்வத்தின் குற்றவாளியான பிரதிவாதிக்கு காலி மேல்நீதிமன்றம் இன்று 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
காலி, அஹங்கம பகுதியைச் சேர்ந்த 61 வயதான பிரதிவாதி ஒருவருக்கே நீதவான் மு.மு.ஹிரிம்புரேகம இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

2005ஆம் ஆண்டின் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 2006ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 18 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் காலி மேல்நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

இந்த யுவதி தந்தையை இழந்தவர் என்பதுடன் அவரின் தாயார் பிரதிவாதியை மறுமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மகள் கர்ப்பமடைந்ததையடுத்து, பிரதேச மக்களால் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அநாமதேய மனுவைக் கவனத்திற் கொண்ட பொலிஸார் பிரதிவாதியை கைது செய்து அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top