பாட்சி சுவாமிகள் என்று அழைக்கப்படும் சூளை தீச்சட்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராம் (வயது 45 என்பவர் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார்.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இவரிடம் குறி கேட்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இன்று காலை சாமியார் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது. அதில் இருந்து இறங்கிய 6 பேர் சேர்ந்த கும்பல் திடீர் என அரிவாளால் சாமியாரை சரமாரியாக வெட்டினர்.
பாட்சி சுவாமிகள் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சாமியார் படுகொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பாட்சி சுவாமிகள் கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக