அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிக அளவில் உயிரிழப்பு நிகழ்கிறது என்று அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட மிக சாதாரணமாக சிகரெட் பிடிப்பதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து காப்பாற்ற அந்நகர நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, நியூயார்க் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை செய்யும் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நகர கவுன்சில் சபாநாயகர் கிறிஸ்டின் குயின்(Christine Quinn) கூறுகையில், இச்சட்டத்தின் மூலம் சுகாதாரமான நகரமாக நியூயார்க்கை மாற்ற முடியும். மேலும் இளம் வயதில் சிகரெட் பிடித்து பழகுபவர்கள், 21 வயதில் முழு நேரமும் சிகரெட் பிடிக்க தொடங்கி விடுகிறார்கள். அதை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக