புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அரச துறையில் பல்வேறு தொழில்களைப் பெற்றுத் தருவதாகக்கூறி பலரிடமிருந்து சுமார் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் தலைமைகப் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவில் எப்பாவல, மாத்தளை மற்றும் விஜிதபுர பகுதிகளைச் சேர்ந்த மூவர் செய்த முறைப்பாடுகளையடுத்தே குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரின் வங்கிக் கணக்கை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top