கேகாலை மாவட்டம் உடகரடுபன பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவியொருவர் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பாமையால் அவரது தந்தை நேற்றுமாலை கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நேற்றிரவூ 10.45 அளவில் சிறுமியின் சடலம் பாழடைந்த வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக