இந்தியா-2வது மாடியிலிருந்து கீழே விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெருங்குடியில் தாய் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.சீர்காழி எருப்பூர் கிராமம் அண்ணா வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. மனைவி
செல்வி. இவர்களுக்கு விஷ்வா (4) உள்பட இரு மகன்கள் உள்ளனர்.
விஷ்வாவின் தாத்தா வீடு பெருங்குடி சீவரம் மகாகவி பாரதியார் நகரில் உள்ளது. அங்கு குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன் பார்த்தசாரதி வந்தார். நேற்று மாலை 2வது மாடியில் காய போட்ட துணியை எடுக்க செல்வி சென்றார்.
அவரது பின்னால் விஷ்வாவும் வந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து விஷ்வா தவறி கீழே விழுந்தான். தலையில் பலத்த காயம் அடைந்த அவன் அலறி துடித்தான். இதை சற்றும் எதிர்பாராத செல்வி அலறியடித்து கொண்டு கீழே ஓடி வந்தார்.
உயிருக்கு போராடிய விஷ்வாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஷ்வா பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக