புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (35), ஆடுகள் மேய்த்து வந்தார். இவரது மனைவி கனகலட்சுமி (31), வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு கிருஷ்ணவேணி (12) என்ற மகளும்,
கார்த்திக்குமார் (7) என்ற மகனும் உள்ளனர்.

கனகலட்சுமி நடத்தையில் கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

2 மாதங்களுக்கு முன்பு கனகலட்சுமி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் மேட்டுப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, மனைவியின் கழுத்தை பிடித்து நெரித்து, உருட்டுக்கட்டையால் தாக்கினார்.

அவர் அதே இடத்தில் இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கிருஷ்ணசாமி தப்பியோடி விட்டார். புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, கிருஷ்ணசாமியை தேடி வந்தனர்.

இன்று காலை பூவனேரி கண்மாய் அருகே காட்டுப்பகுதியில் கிருஷ்ணசாமி இறந்து கிடந்தார். அவர் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top