புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிகெட் போட்டியின் 34-வது லீக் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.


தொடக்க அட்டக்காரர்களாக களம் இறங்கிய டீ காக் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த விகாரி, ஒயிட் தலா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தனர். 44 ரன்கள் எடுத்த தவான் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் வந்த மிஸ்ரா 15, சற்குணம் 10, சமி 19 ரன்களில் ஆட்டம் இழந்தனர். கடைசியல் வந்த ஆசிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 16 பந்தில் 36 ரன்கள் குவித்தார். காயம் காரணமாக வெளியேறிய தவான் பின்னர் விளையாட வந்து 63 ரன்கள் எடுத்தார். இதனால் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. முரளி விஜய் 18 ரன்களிலும், ரெய்னா 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிய ஹசி 45 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டோனி சிறப்பாக விளையாட சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டோனி 67 ரன்கள் எடுத்தது கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் 37 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top