திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பதால் நடிகை சினேகா மீது அதிருப்தியில் இருக்கிறாராம்”
பிரசன்னா.
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படப்பிடிப்பில் சேர்ந்து நடித்தபோது கொஞ்சமும் அச்சமில்லாமல் காதலித்து வந்த நட்சத்திர ஜோடி சினேகா-பிரசன்னா.
அதன்பிறகு மிகவும் ரகசியமாக தங்களது காதலை வளர்த்து வந்த இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக கோலோச்சிய சிம்ரன், ஜோதிகா ஆகிய இருவருமே திருமணம் முடிந்த ஒரு வருடத்துக்குள் குழந்தை பெற்றுக்கொண்டு குடும்பவாழ்க்கையில் செட்டிலாகி விட்டனர்.
ஆனால் சினேகாவோ திருமணம் முடிந்து ஒரு வருடமாகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் நகைக்கடை திறப்பது, ஜவுளிக்கடை திறப்பது, ரியல் எஸ்டேட் என்று பல கடைகளின் திறப்பு விழாக்களிலேயே காலத்தை கழித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு சினேகா நடித்த ‘ஹரிதாஸ்’ படம் சமீபத்தில் ரிலீஸாகி 50 நாட்களை தாண்டி ஓடியதில் சந்தோஷப்பட்ட சினேகா மீண்டும் படங்களில் நடிக்க ‘திடீர்’ முடிவெடுத்திருக்கிறார்.
அது உண்மைதான் என்பது போல, அவர் ஏற்கனவே கமிட்டான விடியல் படம் தவிர, நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து வரும் ‘உன் சமையல் அறையில்’ என்ற புதிய படத்திலும் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் சினேகா.
இதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு தள்ளிப் போட்டிருக்கிறாராம். சினேகாவின் இந்த திடீர் முடிவால் மனம் நொந்துபோன பிரசன்னா அவர்மேல் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
காரணம் பிரசன்னா வீட்டில் பேரக்குழந்தையை கொஞ்ச அவரது, அம்மாவும்,அப்பாவும் ஆசைப்படுவதாகவும் ஆனால் சினேகா பட வாய்ப்புகளை காரணம் காட்டி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டு வருவதாகவும் தெரிகிறது.
இவரைப் போலவே சமீபத்தில் பாலிவுட் ஹீரோ ரிதேஷ் தேஸ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஜெனிலியாவும் சினிமா பட வாய்ப்புகளை காரணம் காட்டி குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாராம்.
ithuthane venam enkirathu
பதிலளிநீக்கு