புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-கோவையில் 13 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளியை கைது செய்தது போலீஸ். சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை செல்வபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பள்ளிக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

பதறிப்போன பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது மாணவி மாயமான நாள் முதல் அதேபகுதியைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெருமாள்(24) என்பவரும் மாயமானது தெரிய வந்தது.

உஷாரான போலீசார் பெருமாளுடன் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை பிடித்து அதிரடியாக விசாரித்தனர். அந்த பெண் பெருமாளின் செல்போன் நம்பரை கொடுத்தார். அதன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பெருமாள் சிறுமியுடன் கோவைக்கு வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.

சிறுமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது.

கைதான பெருமாளிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பள்ளியில் இருந்து கிளம்பிய சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு விடுவதாக பெருமாள் அழைத்திருக்கிறார். ஆனால் வீட்டில் கொண்டு விடாமல் சிறுமியை விழுப்புரத்திற்கு கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு ஒரு வீட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் பெங்களூருக்கு அழைத்துச் சென்று தனி வீடு எடுத்து தங்கவைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி தப்பிச் செல்லாமல் இருக்க பெருமாள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவை பூட்டிச் சென்றிருக்கிறார்.

கையில் இருந்த பணம் செலவானதைத் தொடர்ந்து கோவையில் தன்னுடன் தங்கியிருந்த பெண்ணிடம் பணம் வாங்குவதற்காக பெருமாள் வந்தபோது வசமாக சிக்கிக் கொண்டார்.

கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பெருமாள் மீது 366(வலுக்கட்டாயமாக திருமணத்துக்கு கடத்தி செல்லுதல்), 376(கற்பழித்தல்), 344(அடைத்து வைத்தல்), 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top