இந்தியா-பீகார் மாநிலத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், ஒரு தாய் மற்றும் அவரது மகளை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி ஊரைவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியேறியது.
இச்சம்பவத்தால் பெரும் அவமானத்திற்குள்ளான பெண்ணின் குடும்பத்தார், அவர் இருக்கும் இடத்தை கூறும்படி அந்த ஆணின் தாயாரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
தன் மகன் எங்கு இருக்கிறான் என தெரியாது என அந்த தாய் பல முறை கூறியதை நம்பாத பெண் வீட்டார், அவர்களது பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்ற ஆணின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், அந்த ஆணின் தாய் மற்றும் தங்கையை கடத்தி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் பொலிசார் இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 போரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக