இந்தியா-ஜெய்ப்பூர்: 7 வயது சிறுமியை கற்பழித்தவரை ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53).
இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவுடன், ஊர் மக்கள் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை மீட்டனர். ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
காயம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கடந்த வாரம் பில்வாரா என்ற இடத்தில், ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரே அடித்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக