புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது.


அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள்.

இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.

2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர் என மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் வெளியான மலேரியா ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கையில் மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த வருடத்தில் 23 மலேரியா நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள் 70 பேர் வரையில் மலெரியா நோயினால் பாதிக்கப்பட்டமை கண்டறிப்பட்டதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top