புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கலாசாரத்தை சீரழிப்பதாக நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி ஆகியோர் மீது, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார், சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த முறைப்பாட்டு மனு விவரம்:

விஜய் "டிவி´ சேனலில்," நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி´ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளரான, நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், "உங்களுக்கு கமலை பிடிக்குமா?´ என, கேட்கிறார். எல்லாரும் பிடிக்கும் என்கின்றனர். ஒரு நடுத்தர வயது பெண், "எனக்கு வெறித்தனமாக பிடிக்கும்´ என்கிறார்.

அதற்கு பிரகாஷ்ராஜ், "உங்களுக்கு, கமலிடம் நிறைவேறாத ஆசை, என்ன?´ என, கேட்கிறார்.

அந்த பெண், "கமலை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும்´ என்கிறார். "இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்´ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, "என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்´ என்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், "நடிகை கௌதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு?´ என, பிரகாஷ் ராஜ் கேட்க, "நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு´ என்று கமல் கூறியுள்ளார்.

இதுதவிர, நடிகை திவ்யதர்ஷினி என்பவரும், கமலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை, குடும்பத்துடன் பார்க்கும் பொது அறிவு நிகழ்ச்சியில், இது போன்ற அடுத்தவர் மனைவி, நடிகரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும், நடிகர், நடிகை இருவரும், கணவன் மனைவியாக இல்லாமல், "உடலுறவில் ஈடுபடுவோம்´ என்பதும், நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதுடன், பாலியல் வன்கொடுமைகளை தூண்டுவதாக உள்ளது.

நிகழ்ச்சியை ஒளிபரப்பிய, விஜய் "டிவி´ நிர்வாகம், நடிகர்கள் கமல், பிரகாஷ்ராஜ், நடிகை கவுதமி மற்றும் நடுத்தர வயது பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top