புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இருபாலை கிழக்கில் காதல் தோல்வியால் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பாக அம் மாணவனின் நண்பர்கள் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்று, வேறு ஒருவரை திருமணம் முடிந்துள்ளார்.

குறித்த காதலி தன் கணவனுடன் காரில் செல்வதைக் கண்டதினால் நண்பன் தூங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளான் என உயிரிழந்தவரின் நண்பர்கள் கூறினர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3ம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியும், ராகம மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனும் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top