அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 14 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய பேர்கர் ஒன்று 14 வருடங்களாக அதே நிலையில் இருக்கிறதாம்.
உட்டா மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் விப்பிள் என்பவர், 1999 ஆம் ஆண்டு மெக்டொனால்ட் உணவகமொன்றிருந்து இந்த பேர்கரை வாங்கினாராம். அதை அவர் உட்கொள்ள மறந்து விட்டார்.
அந்த பேர்கர் எவ்வளவு பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டுள்ளது என்பதை நண்பர்களுக்கு காட்டுவதற்காக ஒரு மாதம் அவர் அதை வீசாமல் வைத்திருக்கத் தீர்மானித்தார். ஆனால் அது பழுதடையாமல் இருந்ததால் இந்த பரிசோதனையை அவர் தொடர்ந்தும் மேற்கொண்டார்.
தனது கோட் பைக்குள் 2 வருடங்கள் வைத்திருந்தபோதும் அது அப்படியே இருந்தாம்.
இப்போது 14 வருடங்கள் கடந்த நிலையிலும் அதன் தோற்றம் மாறாமல் இருப்பது குறித்து வியப்பு தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக