புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அவருடன் வந்தவரை இறக்கிவிட்டு அப் பகுதியில் பல தடவைகள் சுற்றியுள்ளார்.

இதனை அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட பொலிசார் அவதானித்ததையடுத்து குறிப்பி;ட்ட நபரை மறித்து விசாரணை செய்தவேளையில், தான் சாவகச்சேரியைச் சோந்தவர் எனவும் சுன்னாகத்தில் இடம்பெறும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகம் கொண்ட பொலிசார் குறித்த நபருடைய கையடக்கத் தொலைபேசியை வாங்கி சோதனை செய்த வேளையில் அவருடைய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் இருப்பதைக் கண்டு பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top