கூண்டுக்குள் உள்ள புலியை கூண்டுக்கு வெளியே அதுவும் நமது அருகாமையில் சந்திக்க நேர்ந்தால் என்னாகும்? இப்படி ஒரு ‘த்ரில்’ அனுபவம் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஜென்னா என்ற அந்தப் பெண் தனது 3 வயது செல்ல மகளுடன் அங்கு நடந்த சர்க்கசுக்கு சென்றார். மகளுடன் சர்க்கஸ் சாகசங்களை அவர் பார்த்து ரசித்தார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். அங்கு கதவை மூடிவிட்டு திரும்பிப் பார்த்தால் அங்கே ஒரு புலி அவருக்கு பின்னால் கைக்கு எட்டும் தொலைவில் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. சர்க்கஸ் சாகசத்தை முடித்து விட்டு அங்கிருந்து நைசாக அந்தப் புலி எப்படியோ தப்பி கழிவறைக்குள் புகுந்து இருக்கிறது.
அந்தப் பெண், புலியைப் பார்த்து பயந்தாலும் அலற வில்லை. அலறினால் ஆபத்து என அமைதியாக இருந்து விட்டார். அவரது 3 வயது செல்ல மகளுக்கோ பக்கத்தில் புலி இருக்கிறதே என பயமில்லை. அந்தப் புலி கழிவறையை பயன்படுத்தி விட்டு தன்கைகளை கழுவிக்கொண்டு விட்டதா என்பதுதான் கவலையாம். அந்தப் பெண் அமைதி காத்ததால் புலி அமைதியாக வெளியேறி விட்டதாம். அதற்குப்பின்னர்தான் அந்தப் பெண்ணுக்கு உயிரே வந்ததாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக