செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதிவரை
விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களான ரகு தக்ஷனா அவரது காதலன் சிவனேசராஜா அஜந், இவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகிய சந்தேகநபர்கள் நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தனர்.
இவர்கள் மீதான வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி த.கருணாகரன் எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலைத் தொடர்ந்து நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால் சிறைச்சாலையில் தனியான அறையில் தடுத்து வைக்குமாறும் உறவினர்கள் கொண்டு வரும் உணவை அனுமதிக்கக் கூடாது எனவும் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவினை மாத்திரம் வழங்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் மத்தியில் பரபரப்ரபை ஏற்படுத்திய இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை பார்வையிட நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு தாயையும், தந்தையும் வெட்டிக் கொலை செய்வதற்கு ‘டோர்ச் லைட்’ பிடித்த மகள்
மட்டக்களப்பில் காதலுக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை குறித்த உண்மைகள்
மட்டக்களப்பில் காதலுக்காக பெற்றோரை கொலை செய்த மகள்-புகைப்படங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக