புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தில் பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து விஜய் ஜேசுதாஸ் அளித்த
பேட்டி வருமாறு:-

விஜய் படத்தில் நான் வில்லனாக வருவதாக செய்திகள் வந்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை எதேச்சையாகத்தான் சந்தித்தேன். ‘தலைவா’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து பேசவில்லை.

எனக்கு நடிக்க ஆர்வம் கிடையாது? வீட்டிலும் சம்மதிக்க மாட்டார்கள். நல்ல கதையம்சம் உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை பரிசீலிப்பேன்.

எனது தந்தை கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ்பட உலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற பெயரில் நாளை மறுநாள் (26-ந்தேதி) இரவு 7 மணிக்கு சேத்துப்பட்டு ஸ்ரீமுத்தா வெங்கடேஸ்வரா ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.

பின்னணி பாடகர்கள் ஸ்வேதாமேனன், சைந்தவி, திப்பு, ஹரிணி, கார்த்திக், ராகுல்நம்பியார், மதுமிதா, ஸ்ரீலேகா, உள் ளிட்ட பலர் இதில் பங்கேற்று ஜேசுதாஸ் பாடிய பாடல்களை பாட உள்ளனர். இதில் என் தந்தையும் பங்கேற்கிறார். இசை நிகழ்ச்சியில் வசூலாகும் தொகை சமூக சேவை அமைப்புக்கு வழங்கப்படும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top