சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மிகப்பிரபலமான ரைன் அருவியின் அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண் இறந்து கிடக்கிறார் என்ற செய்தி சாஃப்ஹாசன்(Schaffhausen) மாநிலப் பொலிசாருக்கு
கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறையின் தகவல் தொடர்பாளர் பேட்ரிக் கேப்ரீஸ்(Patrick Caprez) கூறுகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான ரைன் அருவியின் அழகை ரசித்தப்படி இவர் மலையுச்சியின் 20 மீற்றர் உயரமான இடத்திலிருந்து கீழே இறங்கி நடந்து வந்துள்ளார்.
அப்பொழுது 50 முதல் 100 மீற்றர் உயரத்தில் இருந்து திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தீயணைப்புப்படை வீரர்கள், முக்குளிப்போர் மற்றும் வானூர்தி மீட்புப்படையினர் வந்து இவரது உடலை அருவி நீருக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக