நடிகர் அஜித்துக்கு வருகிற மே 1-ந்திகதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. அஜித் தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்தில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மரில் நடந்து வருகிறது.
பிறந்த நாளான மே-1ல் கிளை மாக்ஸ் காட்சிகள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிறந்தநாளின் போதும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் “கேக்” வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக ஷாலினி மகளை அழைத்துக் கொண்டு ஜெய்சல்மர் செல்கிறார்.
அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் ஒரிசா செல்கின்றார்கள். அங்கு அஜித்தின் பாடல் காட்சியொன்று படமாக்கப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக