புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிரியாவின் தலைநகரை கைப்பற்றுவதில் அதிபர் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இன்று தலைநகர் டமாஸ்கஸ் - மர்ஜா மாவட்ட மத்திய
சதுக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் ராணுவத்தினர், பொதுமக்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். அருகில் நின்றிருந்த கார்கள் மற்றும் கடைகளும் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.

இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்று தெரியவரவில்லை. கடந்த மாதம் இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 6000 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top