புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கம்பியில் தலைமயிரினால் தொங்கியவாறு ஆற்றைக் கடக்கும் உலக சாதனை முயற்சியின் போது உயிரிழந்த கின்னஸ் சாதனையாளர்
உலக சாதனை ஒன்றிற்காக தலைமயிரினால் கம்பியில் தொங்கியவாறு ஆற்றைக் கடக்கும்
முயற்சியின் போது முன்னாள் உலக சாதனையாளர் ஒருவர் தவறி வீழ்ந்து நேற்று உயிரிழந்தார்.

இந்தியாவின் மேற்கு பெங்காலைச் சேர்ந்த 50 வயதான சைலன்ரா நாத் ரோய் என்ற கின்னஸ் சாதனையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரோய் கடந்த வருடடம் தலைமயிரில் கட்டி புகையிரத வண்டியை இழுத்து கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பிடித்தவராவார்.

இதனைத் தொடர்ந்து நேற்று தர்ஜீலிங் நகரிலுள்ள சிலிகுரி எனுமிடத்திற்கு அருகிலுள்ள செலோக் எனுமிடத்திலுள்ள டீஸ்டா ஆற்றின் குறுக்காக கம்பியில் தலைமயிரினால் தொங்கியவாறு கடந்து சாதனை படைக்க தீர்மானித்துள்ளார்.

இந்நிகழ்வைக் காண ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர். அவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் சைலன்ரா நாத் ரோய் தனது சாதனைப் முயற்சியை ஆரம்பித்து கிட்டத்தட்ட அரைவாசித் தூரத்தை அடைந்த நிலையில் சுமார் 25ஆவது நிமிடத்தில் பாதுகாப்புக்காக கமபியில் இணைக்கப்பட்டிருந்த உருளியில் ரோயின் தலைமயிர் சிக்கியுள்ளது.

இதனால் நிலைதடுமாறி ஆற்றினுள் வீழ்ந்துள்ளார் ரோய். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரோயை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ரோய் விழும் போது ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இச்சாதனை நிகழ்விற்கு அவசியமான அனுமதிகளை ரோய் பெறவில்லை என்றும் இறக்கும் போது அவர் கடமையில் இல்லையெனவும் சிலிகுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரோய், மேற்கு பெங்கால் பொலிஸ் வாகன ஓட்டுனரர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top