மன்னார் சிலாபத்துறை பிரதேச பாடசாலையொன்றில் 15 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி கடந்த பெப்ரவரி மாதம் அவர் கல்வி கற்ற பாடசாலைக்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக