புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆடை தொழிற்சாலையுவதி கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியரை இன்று செவ்வாய்க்கிழமை  வரையிலும் விளக்கமறிலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.


இந்த கொலைத் தொடர்பான  வழக்கை நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணக்கு எடுத்துக்க கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம். ஏம்.ஏ. கபூர் இன்று  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதி சடலமாக மீட்கப்பட்டது தொடர்பான வழக்கின் சந்தேக நபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ நீர்கொழும்பு  மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணயின் போது  பிரதான சாட்சியான வைத்தியசாலையின் முன்னாள் சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் உட்பட  மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்துடன், குறித்த யுவதியின் கைப்பை உட்பட மற்றும் பொருட்கள் பரிசீலிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. சமிலா திசாநாயக்காவின் தோழி ஒருவர் சம்பவம் இடம் பெற்ற அன்று சமிலா திசாநாயக்க பாவித்த சகல பொருட்களையும் நீதிமன்றத்தில் வைத்து அடையாளம் காட்டினார்.

இதனை அடுத்து சந்தேக நபரான வைத்தியர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் யுவதி ஒருவர் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார்.

சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான  வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top