புரூனே நாட்டில் தலைநகரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அரச இஸ்லாமிய மசூதிதான் சுல்தான் உமர் அலி சைஃபுதீன் மசூதி.
ஆசிய பசுபிக்கில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கின்ற பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. புரூனேயில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக மிக அற்புதமானதும் இதுதான்.
புரூனே நதி ஓரத்தில் அமைக்கப்பட்ட செயற்கை காயலில் இம்மசூதி கட்டப்பட்டு உள்ளது. இது பளிங்குகளால் ஆன வாயில்களைக் கொண்டது. இதன் மாடங்கள் தங்கத்தால் ஆனவை. பசுமையான தோட்டங்கள், நீரூற்றுக்கள் இதற்கு பேரழகு சேர்க்கின்றன.
மலர்கள் மிகுதியாக நிறைந்த பூங்கா புனித குர் ஆன் வர்ணிக்கின்ற சொர்க்கத்தின் உருவமாக காட்சி தருகின்றது
.
0 கருத்து:
கருத்துரையிடுக