புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுமார் ஆறு அடி நீளமான நாகபாம்பொன்று நீதிமன்றத்திற்குள் புகுந்தமையினால் நீதிமன்ற அறைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மாத்தறை மாவட்ட நீதிமன்ற அறைக்குள்ளேயே இந்த நாகபாம்பு இன்று செவ்வாய்க்கிழமை மதியம் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் பெரும் அச்சமடைந்தனர்.

பாம்பு புகுந்த சமயத்தில் மாவட்ட நீதிமன்ற அறைகளிலும் மற்றும் மேல் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்திருந்தன.

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் காவல் கடமையிலிருந்து பொலிஸாரும் அங்கிருந்த பிரதேசவாசிகளும் இணைந்து அந்த பாம்பை விரட்டிவிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top