இளைஞன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்கிற வழக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் 50000 ரூபாய் பிணையில்
விடுவிக்கப்பட்டு உள்ளார்.
சிலேவ் ஐலண்ட்டில் நவம் மாவத்தையில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு காவலாளியாக உள்ளவரே குற்றம் புரிந்து உள்ளார்.
இங்கு உதவியாளாக வேலை பார்க்க வந்த 22 வயது இளைஞனையே கெடுத்து உள்ளார். இளைஞன் அம்பிலிப்பிட்டியவை சேர்ந்தவர்.
இளைஞன் 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருடன் தொடர்பை ஏற்படுத்தினார். பொலிஸாரால் காவலாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக