சிம்பாவேயில் தானியக்கூடையின் மூலம் ஆகாயத்தில் பறக்கும் மந்திரவாதி என கூறிகொள்ளும், இளம்பெண்கள் இருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிம்பாவேயில் ஹசாரே பகுதியில் இரு இளம்பெண்கள் வீட்டின் முற்றத்தில் நிர்வாணமாக இருப்பதாக வந்த புகாரையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் தாங்கள் மந்திரவாதி என்றும் நெல் அள்ளும் தானியக்கூடையின் மூலம் ஆகாயத்தில் பறந்ததாகவும் பின்னர் அந்த கூடையை அங்கு விட்டுவிட்டதாகவும் கூறினர்.
இதையடுத்து அவர்களுக்கு மனநலம் குறித்த மருத்தவ பரிசோதனைக்கு ஆணையிட்டு உள்ளனர். இது பொய் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மந்திர வேலைகள் செய்ய மந்திரக்கோல் பயன்படுத்துவதைபோல் சிம்பாவேயில் மந்திரக்கூடைகள் பிரசித்தம்.மேலும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளுக்கும், மந்திரவாத செயல்களுக்கும் அங்கு பெரிதும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக