மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆடை மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கியதால் பெண்ணொருவர் நடுவீதியில் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், வந்தாறுமூலையைச் சேர்ந்த 30 வயதான ஸாஹிறா பானு அனஸ் என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவர் செங்கடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக