புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆபிரிக்காவின் கானா நாட்டு வட பகுதியில், உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளை பலியிடும் பழக்கம் ஒழிக்கப்படுவதாக, அந்தப்பகுதியின் உள்ளூர் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி உடல் ஊனத்துடன் பிறக்கும்
குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டு, பின்னர் அவை கொல்லப்படும் இந்த நடைமுறை தடை செய்யப்படுவதாக, மேல் கிழக்குப் பிராந்தியத்தில் நடந்த ஒரு சிறப்பு வைபத்தில் உள்ளூர் தலைவர்கள் அறிவித்தனர்.
இது போன்ற குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்லும் வேலையைச் செய்து வந்த வயது மூத்தவர்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இனி ஊனமுற்ற குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் வேலையைச் செய்வார்கள் .
இது போல ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் தெற்கு செனெகலின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top