அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிட்டனில் குடியேறி அங்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் அது தனது குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
அதற்காக தனது 14 வயது சொந்த மகளின் கர்ப்ப பைக்குள் தானமாக பெற்ற விந்தணுவை, ஊசி மூலம் கட்டாயப்படுத்தி செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்க செய்துள்ளார். மேலும் அக்குழந்தை பெண்ணாக பிறக்க வினிகர் எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கியது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக