ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற
சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் ஹசி 5 ரன்னில் ரிச்சார்ட்சன் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து சகாவுடன் ரெய்னோ ஜோடி சேர்ந்தார். சகா 13 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ரெய்னா சிறப்பாக விளையாடி 42 பந்தில் அரை சதம் அடித்தார். பத்ரிநாத் 34 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அப்போது சென்னை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி புனே வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 16 பந்தில் பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ரெய்னா 50 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
165 ரன்கள் புனே அணிக்கு வெற்றி இலக்கு
புனே அணியில் தொடக்க வீரர்களாக உத்தப்பா ,பின்ஸ் களமிறங்கினர்.பின்ஸ் மொஹிர் சர்மா வீசிய பந்தில் 15 ரன்களில் டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.பின்ஸ் மொஹிர் சர்மா வீசிய பந்தில் 15 ரன்களில் டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் உத்தப்பா 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சுமன் 0, யுவராஜ் சிங் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சுமித் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 35 ரன் எடுத்தார். அதன்பின் வந்த ரிச்சார்ட்சன் 26, புவனேஸ்குமார் 24 ரன்கள் எடுக்க புனே வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி இலக்கு நோக்கை பின் வரிசை வீரர்கள் போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மாத்திரமே புனே அணியால் எடுக்க முடிந்தது.
சென்னை அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி
இதனால் சென்னை அணி 37 ரன்கள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் சர்மா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். 15-ந்தேதி நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது. அதற்கு இன்று பழி தீர்த்துக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் 10 போட்டியில் 8 வெற்றிகள் பெற்று சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக