சிறுமிகள் பலரையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்து இருக்கின்றார் என்கிற குற்றச்சாட்டில் இங்கினியாகலவில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவரால் மன நோயால் பாதிக்கப்பட்டவர் போன்று நடித்து சிறுமிகளுடன் கடந்த பல காலமாக மோசமாக நடந்து வந்து இருக்கின்றார்.
14 வயது பாடசாலை சிறுமி ஒருத்தியை 2010 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்து உள்ளார். கடந்த சனிக்கிழமை 16 வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
மட்டும் அன்றி ஒரே வீட்டில் இரு சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்து உள்ளார். இன்னொரு சந்தர்ப்பத்தில் வீதியில் வைத்து ஒரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
அத்துடன் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்து உள்ளார்.
இவரை போன்றவர்கள் காம இச்சையை தீர்க்க மன நோயாளிகளை போல் நடிக்கின்றனர், பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக