மே தினத்தையொட்டி நாளை எதிர் நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகிறது.
எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், பிரியா ஆனந்த், நந்திதா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஆர்.எஸ். செந்தில் இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்து உள்ளார். இதில் நயன்தாரா சம்பளம் வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாக ஆர்.எஸ். செந்தில்குமார் தெரிவித்தார். காமெடி படமாக தயாராகி உள்ளது என்றும் ஒரு இளைஞர் வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகின்றனர். நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளும் அவன் வாழ்க்கையில் எத்தகு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் கதை என்றும் அவர் கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறும்போது: எதிர்நீச்சல் போட்டு நாயகன் எப்படி முன்னேறுகிறான் என்பதே கதை என்றார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். திருட்டு தொழில் செய்யும் நண்பர்கள் பற்றிய கதை.
மூன்று பேர் மூன்று காதல் படத்தை வசந்த் இயக்கியுள்ளார். அர்ஜுன், விமல், சேரன் இணைந்து நடித்துள்ளனர். மூன்று இளைஞர்களை சுற்றி பின்னப்பட்ட காதல் கதை.
0 கருத்து:
கருத்துரையிடுக