புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விஷால் நடிக்கும் பட்டத்து யானை படத்தில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியன்
இயக்குகிறார். மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படம் குறித்து விஷால் கூறியதாவது:-

பட்டத்து யானை படத்தில் சமையல்கார இளைஞனாக வருகிறேன். நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் ஆரம்பிக்க முயற்சிப்பதும் அது நிறைவேறியதா என்பதும் கதை. காமெடி, பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகி யுள்ளது. கருத்து சொல்லாமல் கல்லா பெட்டியை நிரப்பும் நோக்கில் இயக்குனர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிப்பது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா கேமரா பயமின்றி திறமையாக நடிக்கிறார். புதுமுகம் மாதிரி இல்லை. தொழில் அக்கறையோடு ஒவ்வொரு காட்சியிலும் சிரத்தை எடுத்து ஆர்வமாக நடிக்கிறார். நிறைய தன்னம்பிக்கையும் இருக்கிறது. அவரது முதல் படம் எங்களுடைய படமாக அமைந்ததில் சந்தோஷம். இவ்வாறு விஷால் கூறினார்.

நடிகை ஐஸ்வர்யா கூறியதாவது:-

பட்டத்து யானை என் முதல் படம். கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். என் நிஜ வாழ்க்கைக்கு தொடர்பு இல்லாத கேரக்டர். விஷால் உதவியாக இருந்தார். என் அப்பா அர்ஜூனும் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. முத்தக்காட்சி, கவர்ச்சி போன்றவை கதையை பொருத்தது. தொழில் ரீதியாகவே அவற்றை அணுகுவேன். படப்பிடிப்பில் நான் மயங்கி விழுந்ததாக வதந்தி பரவியுள்ளது. அது உண்மை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் பூபதி பாண்டியன் கூறும்போது, சீரியஸ் ஆன கதையை காமெடியாக எடுத்துள்ளோம். சண்டை காட்சிகளும் உள்ளன. சந்தானம் இரு வேடத்தில் வருகிறார் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top