புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் கஹானி. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார்.



லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார்.

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கேரக்டருக்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது.

சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது.

இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். வயிற்றை தள்ளிக்கொண்டு கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் கால்ஷிட்டை நயன்தாரா ஒதுக்கி கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top