டுபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டின் பெண்கள் கழிவறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண், கழிவறையின் உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி ஒலித்ததை
கேட்டு திடுக்கிட்டார்.
செல்போனை எடுத்துப் பார்த்த அந்த பெண், அதில் கழிவறையை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாணப் படப் பதிவுகள் இருப்பதை கண்டார். இதனையடுத்து, அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியிடம் அந்த செல்போனை அவர் ஒப்படைத்து புகார் அளித்தார்.
நிர்வாகியின் விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணியாற்றும் ஓர் இந்தியருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்த போலீசார், துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீது நடைபெற்ற விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்த இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனைக்கு பிறகு அவர் துபாயில் இருந்து வெளியேற்றப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக