புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மும்பை மாநிலம் தானேவில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.


தன்னை துன்புறுத்தும் அண்ணனின் செயலை பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்த அந்த 14 வயது சிறுமி, நேற்று கடும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும், இந்த கர்ப்பத்திற்கு அச்சிறுமியின் அண்ணன் காரணம் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அண்மை காலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் நடைபெறும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top