அன்னக்கொடி படத்தை முடித்த பாரதிராஜா அடுத்து மீண்டும் கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒரு நெடுந்தொடரை இயக்குகிறார். அதற்கு முன் அவர் எடுக்கும் இன்னொரு அவதாராம், நடிகர்.
கமல்ஹாசன் பலமுறை கேட்டும் நடிக்காத பாரதிராஜா தனது மரியாதைக்குரிய நண்பர் மணிரத்னத்துக்காக ஆய்தஎழுத்து படத்தில் வில்லனாக நடித்தார். பிறகு தாமிராவின் இயக்கத்தில் ரெட்டைச்சுழி படத்தில் பாலசந்தருடன் நடித்தார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்ததில்லை.
இந்நிலையில் விஷால் தனது சொந்த படநிறுவனம் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடிக்கும் பாண்டிய நாடு படத்தில் வெயிட்டான அப்பா ரோல் ஒன்று இருந்திருக்கிறது. விஷாலின் அப்பாவாக வரும் இந்த கதாபாத்திரம் விஷாலின் கதாபாத்திரத்துக்கு இணையானது. அதில் நடிக்க பாரதிராஜாதான் பொருத்தமாக இருப்பார் என அவரிடம் படத்தை இயக்கும் சுசீந்திரன் நேரடியாகவே கேட்டிருக்கிறார்.
பாரதிராஜா என்ன மனநிலையில் இருந்தார் என தெரியவில்லை. உடனே சரி என்று சம்மதத்தை தெரிவித்துள்ளார். இன்ப அதிர்ச்சியான சுசீந்திரன் பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துவிடும் முடிவில் அதற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.
பாரதிராஜாவின் என்ட்ரியால் பாண்டிய நாடு ஸ்டார் அந்தஸ்தை எட்டியிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக