பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா. இவர் தமிழில் கோ படத்தில் நடித்தார். தற்போது பாரதிராஜா இயக்கும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கார்த்திகா
கூறியதாவது:-
எனக்கு பிளஸ், மைனஸ் இரண்டுமே எனது அம்மா ராதாதான். சினிமாவுக்கு வந்ததும் ராதா மகள் என்ற அறிமுகத்தோடு பிரபலமானேன். மரியாதையும் கிடைத்தது. அதில் சந்தோஷப்பட்டேன்.
ஆனால் சிலர் படத்தில் என் தாய் போல் எனக்கு நடிப்பு வரவில்லை என்று விமர்சிக்கிறார்கள். ராதா போல் ஆட வரவில்லை என்றும் ஒப்பிட்டு பேசு கிறார்கள். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
என் தாய் சினிமாவில் உயர்ந்த இடத்தை அடைய நிறைய கஷ்டப்பட்டு உள்ளார். அவர் இடத்தை என்னால் பிடிக்க முடியாது. எனவே தாயுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் திறமையை வைத்து என்னைப் பாருங்கள். தனித்தன்மையோடு என்னை பாருங்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக