குடும்பத் தகராறு காரணமாக இளம் தாய் ஒருவர் அலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மட்டக்களப்பு
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
பள்ளிச்சேனை பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ஜோஜினி மேரி (வயது 21) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்தில் மேசன் வேலை செய்து வருபவராவார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த கணவன் மீண்டும் வேலைக்காக யாழ்ப்பாணம் செல்ல புறப்பட்ட போது கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஆத்திரமடைந்த பெண் தனது பிள்ளைக்கும் அலரி விதைகளை பருக விட்டு தானும் உட்கொண்டுள்ளார்.