புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு-அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாலமுனை 3ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய பார்த்திமா பர்வின் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சனிக்கிழமை இரவு வீட்டில் ஏற்பட்ட வாய்த் தர்கத்தையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று இரவு தங்குவதற்கு அனுமதிகேட்டு அறையில் நித்திரைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் கணவன் இரவு 10.20 மணிக்கு மனைவியை தேடி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று அறைக்குச் சென்றபோது அறையின் கூரையில் அப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி 10 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
Top