தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் எதிர்நீச்சல். இதை கொண்டாடும் விதமாக வெற்றி விழா நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி வரும் ஜூன் 1ஆம் தேதி ஜெனிவாவில் நடக்க இருக்கிறது.
இதில் கலந்து கொள்ளவிருக்கும் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், ‘உண்மையாலுமே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படிப்பட்ட விழா, அதுவும் ஜெனிவாவில் நடக்கிறது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
என்ன ஒரு வருத்தம் என்றால் எதிர்நீச்சல் படத்துக்கு அப்புறம் ஒரு படத்துக்கு ரெண்டு கோடி சம்பளம் கேட்கிறேன்னும், நான் யாரை கதாநாயகியா போடணுனு சொல்றனோ அவங்களைத்தான் புக் பண்ணணும்னு அடம் புடிக்கிறேன்னும் தப்புத் தப்பா பேசுறாங்க.
அப்படியெல்லாம் யார்ட்டயும் டிமாண்ட் வைக்கிறதில்லை, யாரு இந்த மாதிரியான வேலை பாக்குறாங்கன்னு தெரியலை என்கிறார் வருத்தத்துடன்.