சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. மலையாள வரவான இவர், தமிழில் ‘சீடன்’, ‘எங்கேயும் எப்போதும்’ படங்களைத் தொடர்ந்து மலையாளப்
பக்கம் சென்றார். பின்னர் கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஆஞ்சநேயன் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆஞ்சநேயன் திருமணமானவர் என சொல்லி, அவர்மீது அனன்யாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு ஆஞ்சநேயனையே திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் அனன்யா.
கணவரின் நிபந்தனையின்பேரில் இனி மலையாள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சொன்ன அனன்யா, தற்போது விமல், பிரசன்னா இணைந்து நடிக்கும் ‘புலிவால்’ என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் ஓவியா, இனியா என இரு நடிகைகள் இருந்தாலும், அனன்யாவின் நடிப்புக்கு தகுந்தாற்போல் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.