புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்கியதுடன் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக சவூதி தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்காக ஏப்ரல் 26ஆம் திகதி முதல் ஜுலை 3ஆம் திகதி வரையிலான மூன்று மாத கால அவகாசமும் வழங்கியது.

இதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் சுமார் 300 இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தூதரகம் அறிவிக்கின்றது.
 
Top