புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகைகள் குண்டாக இருந்தால் மட்டுமே முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்பது எழுதப்படாத தீர்ப்பு.

அதனால் தமிழுக்கு என்ட்ரியாகும் நடிகைகள் முதலில் குஷ்பூவை தங்களது ரோல் மாடலாக்கி கொள்கின்றனர்.

அதையடுத்துதான் சரியான படத்தை தேர்ந்தெடுத்து என்ட்ரி கொடுக்கிறார்கள்.

ஆனால் ஹன்சிகாவை பொறுத்தவரை வரும் போது குஷ்புவை விடவும் குண்டாக வந்தார். ஆனால், நாளடைவில் சற்று குறைத்து தமிழ்நாட்டு ரசிகர்களின் டேஸ்டுக்கு ஏற்ற நடிகையாக தன்னை உருவாக்கி கொண்டார்.

இந்நிலையில் எதிர்நீச்சல் நாயகி ப்ரியா ஆனந்த், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் உடல் பெருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு தனது ஒல்லிக்குச்சி உடம்பை குண்டாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம்.

அதனால் இதுவரை அடிக்கடி காத்து வாங்க ஜிம்முக்கு சென்று வந்த ப்ரியா, இப்போது அந்த பக்கம் தப்பித்தவறியும் செல்வதில்லையாம்.

உடம்பை புஷ்டியாக்கும் ஐஸ்கிரீம் மற்றும் நான்வெஜ் அயிட்டங்களை பொளந்து கட்டி வருகிறாராம்.

கூடிய சீக்கிரமே நானும் ஹன்சிகா மாதிரி கொழு கொழு உடம்புக்காரியாக மாறி, கொலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவேன் என்கிறாராம் ப்ரியா ஆனந்த்.
 
Top