புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் காய்ரத்கஞ்ச் என்ற இடத்தில், கடந்த 16ம் திகதி வீட்டு வேலைக்குச் சென்ற, 15 வயது தலித் சிறுமியை, வீட்டின் உரிமையாளரின் மகன் மானபங்கம் செய்துள்ளான். அவன் பிடியிலிருந்து தப்பிய அந்தச் சிறுமி, நடந்ததை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் செய்யவே, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இதனால் கோபம் கொண்ட இளைஞனின் தந்தை கஞ்சேடி லால் என்பவர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி சிறுமியை எரித்தார்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நிலை, மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
Top