பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
கதிரியக்கத்தின் வாயிலாக கண்டுபிடிக்க முடியாத உள்ளார்ந்த புற்றின் வளர்ச்சியை கூட இந்த அமுலெட் கருவி வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும்.
இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 30 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் இருந்த நவீன கருகி மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
50 மைக்ரான் அளவு கொண்ட துல்லியமான காட்சி தெளிவுடன் இந்த கருவி மார்பக புற்றுநோயை பரிசோதித்து தகவல் அளிக்கும்.
'பியூசி' நிறுவனம் தயாரித்துள்ள இந்த நவீன கருவியில் ஒருமுறை சோதனை செய்து கொள்ள ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கருவியை புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்த பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "பெருகி வரும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு எல்லா பெண்களுக்கும் ஏற்பட வேண்டும்.
புற்று நோயை கண்டுபிடிக்கவும் அதை எதிர்த்து போராடவும் எல்லா பெண்களும் இந்த நவீன பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.